கோலாலம்பூர், பிப் 18 – எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் தேசிய துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லையென பேரா பி.கே.ஆர் முன்னாள் தலைவர்
Farhash Wafa Salvador Rizal தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் மாதம் டத்தோஸ்ரீ அன்வாரின் அரசியல் செயலாளர் பதவியிலிருந்து Farhash விலகினார். பி.கே.ஆர் கோம்பாக் டிவிசன் தேர்தலில் அதன் நடப்பு தலைவரும் சிலாங்கூர் மந்திரிபுசாருமான Amirudin Shari யை எதிர்த்து போட்டியிடப் போவதாக அவர் அண்மையில் கூறியிருந்தார்.
கடந்த 2020ம்ஆண்டு பிப்ரவரி மாதம் அஸ்மின் அலி பி.கே.ஆர் கட்சியிலிந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது காலியாக இருக்கும் துணைத்தலைவர் பதவிக்கு Farsh குறிவைத்திருப்பதாக கூறப்டுகிறது.
பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவரான ரபிஷி ரம்லியும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் என்பதோடு அவர் மீண்டும் பி.கே.ஆர் கட்சியில் தீவிர அரசியலில் ஈடுபடக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.