
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 9 – பெட்டாலிங் ஜெயாவில் கம்பீரமாக அமைந்துள்ள PJS 1 புதிய தமிழ்ப்பள்ளிக்கு வருகை புரிந்த துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ Ahmad Zahid Hamidi யின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி
Arvend AppalaSamy அப்பள்ளியின் நூல் நிலையத்திற்கு 10,000 ரிங்கிட் மதிப்புள்ள புத்தகங்களை அன்பளிப்பு செய்தார். அந்த பள்ளிக்கு அருகேயுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பள்ளிப் பிள்ளைகள் மற்றும் இந்திய சமூகத்தினர் பல்கலைகக்ழக நூலக அளவைக் கொண்ட அந்த நூல் நிலையத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என Arvend ( அர்விந்த் ) தெரிவித்தார். இந்த நிகழ்வில் மலேசிய தமிழ்ப் பள்ளி கல்வி மேம்பாடு மற்றும் சமூக நல சங்கத்தின் தலைவர் M. வெற்றி வேலன், அந்த இயக்கத்தின் துணைத் தலைவர் A. Subramaniyam ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக PJS 1 தமிழ்ப் பள்ளியின் நூல் நிலையம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் அர்விந்த் வெளியிட்டார்.
புதிதாக கட்டப்பட்ட இந்த பள்ளி சிலாங்கூரின் 100 ஆவது தமிழ்ப் பள்ளியாகும். சிலாங்கூரில் மிகப் பெரிய பள்ளியாக திகழும் இந்த பள்ளி 700 பிள்ளைகள் பயிலும் வசதியைக் கொண்டுள்ளது. அருகேயுள்ள இந்திய சமூகத்தின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அந்த பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மலேசிய தமிழ்ப்பள்ளி கல்வி மேம்பாடு மற்றும் சமூக நல சங்கத்தின் தலைவர் எம்.வெற்றிவேலன் கேட்டுக்கொண்டார்.