
பட்னா, ஏப்ரல்-11, கிழக்கிந்திய மாநிலமான பீஹாரில் 24 மணி நேரங்களில் குறைந்தது 22 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை இடி மின்னலுடன் கூடிய அடைமழையால் அங்கு ஏராளமான மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.
புயல் காற்றுடன் ஆலங்கட்டி மழையும் சேர்ந்துகொண்டது.
இந்நிலையில் 8 மாவட்டங்களில் கட்டடங்களுக்கு வெளியே பொதுவெளியில் அந்த உயிரிழப்புகள் பதிவுச் செய்யப்பட்டதாக, உள்ளூர் தொலைக்காட்சிகள் தெரிவித்தன.
எனினும் பீஹார் முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் 4 மாநிலங்களில் 13 பேர் மரணமடைந்ததாகக் கூறப்பட்டது.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபமும் ஆறுதலும் தெரிவித்த பீஹார் முதல் அமைச்சர் நித்திஷ் குமார், அவசர நிதி உதவியும் அறிவித்தார்.
அவ்கையில் வாரிசுகளுக்கு மலேசிய ரிங்கிட்டுக்கு 20,712 வெள்ளி கருணைத் தொகை வழங்கப்படுகிறது.
இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் பருவமழை தொடங்கியவுடன், மின்னல் தாக்கி நூற்றுக்கணக்கானோர் இறக்கின்றனர்.