பெட்டாலிங் ஜெயா, பிப் 16- வாகனங்களுக்கு எண்ணெய் நிரப்புவதற்காகத்தான் எண்ணெய் நிலையங்களுக்குச் செல்வார்கள்.
ஆனால், கெந்திங்கிலுள்ள பிரபல எண்ணெய் நிலையம் ஒன்றிற்கோ, பெரும்பாலானவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளவே செல்கின்றனர்.
எல்.இ.டி வகை விளக்குகள் பொருத்தப்பட்ட அந்தப் பெட்ரோன் எண்ணெய் நிலையம், இரவில் அழகிய காட்சியை ஏற்படுத்துவதால், புகைப்பட விரும்பிகளும் சுற்றுலாப் பயணிகளும் அங்கு குவிந்ததையடுத்து நேற்று அப்பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸ் ரோந்துக் கார்கள் அந்த எண்ணெய் நிலையத்திற்கு விரைந்த காட்சியை அங்குள்ள வலைத்தளவாசிகள் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.