Latestமலேசியா

புகைப்பதற்கு எதிரான மசோதா ஜூன் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல்

கோலாலம்பூர், மே 31- 2023 ஆம் ஆண்டின் பொது சுகாதார மசோதா அல்லது புகைப்பதற்கான தயாரிப்பு பொருட்களை கட்டுப்படுத்தும் மசோதா ஜூன் மாதம் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் . இளம் தலைமுறையினரை புகைப்பிடிப்பதிலிருந்து தடுப்பதற்காக மின் சிகரெட்டுகள் உட்பட புகைக்கும் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை முறைப்படுத்த வேண்டியிருப்பதாக சுகாதாரத்துறை துணையமைச்சர் Lukanisman Awang Sauni தெரிவித்தார். விரைவில் இந்த மசோதா முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தேசிய நிலையிலான உலகில் வேண்டாம் புகையிலை தினத்தை தொடக்கிவைத்தபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். இந்த நிகழ்வில் மலேசியா மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் முருக ராஜ் ராஜதுரை ,தேசிய புற்றுநோய் சங்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சுந்தரி சோமசுந்தரம் , டத்தோ எம்.எஸ் மகாதேவன் , மலாக்கா சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் Rusdi Abdul Rahman ஆகியோரும் கலந்து கொண்டனர்,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!