ஜெனிவா, டிச 31 – விமானத்தில் ஏற்பட்ட புகை காரணமாக சுவிஸ்லாந்து அனைத்துலக விமான நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் அவசரமாக தரையிறக்கப்பட வேண்டிய நிலையில் உயிரிழந்தார். 74 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்களுடன், ஏர்பஸ் A220-300 ஜெட் விமானம் , டிசம்பர் 23ஆம் தேதியன்று புக்கரெஸ்டில் ( Bucharest ) இருந்து சூரிச்சிற்கு பயணத்தில் ஈடுபட்டிருந்தது. இயந்திர கோளாறினால் , விமானியின் அறை மற்றும் உட்பகுதியில் புகை நிறைந்ததால் விமானம் பாதுகாப்புடன் ஆஸ்திரியாவின் Graz சில் தரையிறக்கப்பட்டது.
திங்கட்கிழமையன்று Graz சிலுள்ள மருத்துவமனையில் எங்களது இளம் பணியாளர் இறந்தார். அது குறித்து நாங்கள் துயரமும் கவலையும் அடைகிறோம் என சுவிஸ்லாந்து அனைத்துலக விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.