கோலாலம்பூர், அக்டோபர் 3 – பினாங்கிற்கு சென்று கொண்டிருந்த Firefly விமானத்தில், தீடிரென கேபினுள் புகை சூழ பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், அவ்விமானம் மீண்டும் சுபாங்கிலுள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
விமானத்தின் மின் விசிறி செயலிழப்பால், குளிரூட்டி அதிகம் வெப்பமடைந்து, கேபினில் புகை நிரம்பியிருக்கலாம் என விமானி தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், விமானத்தில் வேறு சில பிரச்சனைகளும் இருந்திருக்கலாம் என்றும், சம்பவத்தில் யாரும் காயம் ஏற்படாமல் பாதுகாப்பாக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதையும் அவர் கூறினார்.