
கோலாலம்பூர், மார்ச் 29 – அயோப் கான் மைடின் பிச்சய் ( Ayob Khan Mydin Pitchay ) புக்கிட் அமானின் CID -குற்றப் புலனாய்வு துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனம், ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக , போலீஸ் படையின் செயலாளர் Noorsiah Saaduddin தெரிவித்தார் .
அயோப் கான் தற்போது, புக்கிட் அமானின் போதைப் பொருள் குற்றப் புலனாய்வு பிரிவின் இயக்குநராக உள்ளார். இதற்கு முன்பு அவர், ஜோகூர் மாநில போலீஸ் தலைவராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.