மலாக்கா, மார்ச் 3 – மலாக்காவிலுள்ள புக்கிட் செயிண்ட் பால் ( St Paul ) பெயரை புக்கிட் மலாக்கா எனும் அதன் அசல் பெயருக்கு மாற்றும் விவகாரத்தால், இன்று மலாக்கா மாநில சட்ட மன்ற கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
அந்த பெயர் மாற்றம் வரலாற்றினை மாற்றும் ஒரு முயற்சியா என DAP-யைச் சேர்ந்த Bandar Hilir சட்டமன்ற உறுப்பினர் Leng Chau Yen அவையில் கேள்வி எழுப்பினார்.
காலனித்துவத்துக்கு முன்பாக மலாக்கா மலாய் வரலாற்றில் புக்கிட் மலாக்கா என்ற பெயரே இடம்பெற்றுள்ளது. எனவே அந்த பெயர் மாற்றம், வரலாற்றினை மாற்றுவதாக அமையாது. மேலும் அந்த மலையில் உள்ள செயிண்ட் பால் தேவாலயத்தின் பெயர் நிலைநாட்டப்பட்டிருப்பதை , மாநில சுற்றுலா – பாரம்பரிய –கலாச்சார செயற்குழுவின் தலைவர் Datuk Muhammad Jailani Khamis சுட்டிக் காட்டினார்.
அத்துடன் காலனித்துவ காலத்தில் இருந்த பெயரை நாம் ஏன் பின்பற்ற வேண்டும். நாம் சுதந்திரம் பெற்ற மலேசியர்கள் ஆவோம். ஆதலால் அசல் பெயரையே தக்க வைப்பதே நல்ல முடிவாகுமென அவர் குறிப்பிட்டார்.