Latestமலேசியா

பினாங்கில் பழுதுபார்க்கப்பட்ட உல்லாச கப்பல் தீவிபத்தில் அழிந்தது

பாயன் லெப்பாஸ் , டிச 12 – பினாங்கு, Batu Maung , Limbongan னில் பழுதுபார்க்கப்பட்டு வந்த உல்லாசக் கப்பல் ஒன்று தீவிபத்தில் அழிந்தது. நேற்று பிற்பகல் மணி 2.44 அளவில் இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் நிகழ்விடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டதாக Bayan Baru தீயணைப்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி Rohaizai Abdul Aziz தெரிவித்தார்.

Jalan Perak மற்றும் Seri Balik Pulau விலுள்ள தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் நடவடிக்கையில் உதவினர். அந்த உல்லாச கப்பலின் 70 விழுக்காடு தீயில் அழிந்தாக Rohaizal கூறினார். எனினும் அந்த தீவிபத்தில் எவரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லையென அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!