
கோலாலம்பூர் , ஜன 28 – புக்கிட் ஜாலில் LRT ரயில் சேவையின் நேரம் இன்று அதிகாலை மணி இரண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த தேசிய விளையாட்டு மைதானத்தை சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கும் பொது மக்களின் தேவையை அறிந்து அந்த கூடுதல் நேர ரயில் சேவை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக, Prasarana நிறுவனம் தெரிவித்தது.
அதோடு , புக்கிட் ஜாலில் நிலையத்திலிருந்து பயணிகள் தங்களது இலக்கை சென்றடைவதற்காக , இதர ரயில் நிலையங்களின் சேவை நேரமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
அதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட 20 வழிகளுக்கான Rapid KL பேருந்து சேவையும் நீட்டிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.