Latestமலேசியா

புக்கிட் திங்கி அருகே டிரெய்லர் பள்ளத்தில் விழுந்தது; இருவர் மரணம்

பெந்தோங், ஜன 7 – பழைய உலோகங்களை ஏற்றிச் சென்ற டிரெய்லர் ஒன்று புக்கிட் திங்கி அருகே கிழக்குக் கரை நெடுஞ்சாயின் 42.1ஆவது கிலேமீட்டரில் சுமார் 20 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததில் இருவர் மரணம் அடைந்தனர்.

நேற்றிரவு மணி 8.16 அளவில் இந்த விபத்து குறித்த தகவலை தாங்கள் பெற்றதாக பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பெந்தோங் (Bentong) தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் ஷாபி சுலோங் (Mohd Shafie Sulong) தலைமையில் 9 தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மோப்ப நாயின் சேவையைப் பயன்படுத்தி ஓட்டுநரையும் அவரது உதவியாளரையும் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் இருவரும் டிரெய்லரின் முன்புறத்தில் பழைய உலோக குவியலுக்கு அடியில் சிக்கி புதையுண்ட நிலையில் காணப்பட்டனர்.

மீட்பு கருவிகளை பயன்படுத்தி அவர்களின் உடல்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தீயணைப்புத்துறையின் பேச்சாளர் தெரிவித்தார். அந்த இருவரின் அடையாளம் இன்னும் காணப்படவில்லை. அவர்களின் உடல்கள் சவப் பரிசோதனைக்கு கொண்டுச் செல்வதற்காக தீயணைப்பு வீரர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!