
ஜோகூர் பாரு, மார்ச் 22- ஜோகூரில் புக்கிட் பத்து சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்திய சமூகத்தினருக்காக இந்து தகன மையம் நிர்மாணிக்கப்பட வேண்டும் என புக்கிட் பத்து சட்டமன்ற உறுப்பினர் Arthur Chiong Sen Sern ஜோகூர் சட்டமன்ற கூட்டத்தில் அறைகூவல் விடுத்தார். இந்த திட்டத்திற்காக 2 ஏக்கர் நிலத்தையும் அதற்கான நிதியையும் ஜோகூர் அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கூலாய் வட்டாரத்தில் உள்ள இந்து மயானங்களில் தகனம் செய்வதற்கு ஒரு இடம்கூட இல்லாமல் இருப்பதால் இதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தனியார் தகனக் கூடங்கள் இந்திய சமூகம் நடத்தும் ஈமச்சடங்குகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். B40 பின்னணியில் உள்ள இந்தியர்கள் தனியார் தகன நிறுவனங்களுக்கு அதிக பணம் செலுத்துவது, அவர்களுக்கு மிகவும் சுமையாக உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்படுமானால், அது கூலாய் நாடாளுமன்றம் மற்றும் புக்கிட் பத்து சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்திய சமூகத்திற்கு பெரும் பயனாக இருக்கும் என Arthur Chiong கேட்டுக் கொண்டார்.