ஜோகூர் பாரு, பிப் 22 – எதிர்வரும் ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் Bukit Batu (புக்கிட் பத்து) சட்டமன்ற தொகுதியில் வேட்பாளரை நிறுத்தும் விருப்பத்தை ம.இ.கா கொண்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன் ம.இ.கா கூலாய் தொகுதி கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்தாக ம.இ.கா உச்ச மன்ற உறுப்பினரான எஸ்.சுப்பையா கூறியதாக சினார் ஹரியான் தகவல் வெளியிட்டது, கூலாய் நாடாளுமன்ற தொகுதியில் 17,000 இந்திய வாக்காளர்கள் உள்ளனர் என்ற அடிப்படையில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார், கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் 56 விழுக்காடு இந்தியர்களின் வாக்குகளை அந்த தொகுதியில் தேசிய முன்னணி பெற்றது.
புக்கிட் பெர்மாய் சட்டமன்ற தொகுதியில் 5,216 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். செனாய் தொகுதியில் 7,996 இந்திய வாக்காளர்கள் உள்ளனர், தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் ஆதரவோடு 3,790 இந்திய வாக்காளர்களைக் கொண்ட Bukit Batu தொகுதியை ம.இ.கா கைப்பற்ற முடியும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் சுப்பையா தெரவித்தார்.