புக்கிட் பெராப்பிட் குடிநுழைவு துறையின் கடப்பிதழ் அலுவலகத்தில் தீ விபத்து

ஈப்போ, பிப் 6 – உலு பேரா மாவட்டத்தில் Pengkalan Hulu வுக்கு அருகே, Bukit Berapit குடிநுழைவுத் துறையின் கடப்பிதழ் பரிசீலிக்கும் அலுவலகம் இன்று காலையில் தீவிபத்துக்குள்ளானது. மூன்று மாடி கொண்ட அந்த கட்டிடத்தில் முதல் மாடி அலுவலகத்தில் இருந்த மேசை ,நாற்காலி போன்ற தளவாட பொருட்களுடன் கணினிகளும் சேதம் அடைந்ததாக தீயணைப்புப் படையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இன்று காலை மணி 8.42 அளவில் இது தொடர்பான தகவல்கிடைத்ததைத் தொடர்ந்து பெங்காலான் உலு மற்றும் கெடா பாலிங் ஆகிய தீயைணைப்பு நிலையங்களைச் சேர்ந்து தீயணைப்பு வீரர்கள் உடனயாக சம்பவம் நிகந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
சுமார் அரை மணிநேரத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அந்த தீவிபத்தில் உயிர்சேதம் அல்லது எவரும் எவரும் காயம் அடையவில்லை. இந்த தீவிபத்தற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
[3:31 pm, 06/02/2023] Ramesh Sir: துருக்கியில் நிலநடுக்கத்தால், 50-பதுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு
துருக்கியை, 7.9 magnitude-ஆக பதிவான வலுவான நிலநடுக்கம் உலுக்கியதில், 50-பதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு நேரப்படி அதிகாலை மணி 4.17 வாக்கில் அந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஏழு கிலோமீட்டர் ஆழத்தில் மையமிட்டிருந்த அந்த நிலநடுக்கம், துருக்கியின் அண்டை நாடுகளான லெபனான், சிரியா வரை உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் கட்டங்கள் பல இடிந்து தரைமட்டமாகின.
அதனால், பனி கொட்டி கிடக்கும் சாலை வழியே இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை தேடி மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர் பல்வேறு சவால்கள் ஏதிர்நோக்கியுள்ளதாக கூறப்படுகிறது.