Latestஉலகம்சிங்கப்பூர்

கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய இளம் செஸ் வீரர் அஷ்வத் கெளசிக்

சிங்கப்பூர், பிப் 23 – Classical செஸ் போட்டியில் கிராண்ட்மாஸ்டரை வீழ்த்திய இளம் வீரர் என்ற வரலாறு படைத்துள்ளார் சிங்கப்பூரைச் சேர்ந்த 8 வயதே ஆன அஷ்வத் கெளசிக். 

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில், 37 வயதான போலந்து கிராண்ட்மாஸ்டரான Jacek Stopa-வை வீழ்த்தி வெற்றி அடைந்துள்ளார் அஷ்வத். 

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர், முன்னதாக 8 வயது கீழ் பிரிவில் ஆசிய Youth Championship 2022 போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை பெற்று சாம்பியன் விருதை வாகை சூடியுள்ளார். 

இந்நிலையில், தற்போது போலந்தின் கிராண்ட்மாஸ்டர் பெற்ற வீரரை வீழ்த்தியதை தொடர்ந்து, அஷ்வத் குறைந்த வயதில் இளம் வீரர் என அந்தஸ்தை பெற்றுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!