உலு சிலாங்கூர், ஆகஸ்ட் -31, போதைப்பொருள் குற்றம் உள்ளிட்ட 16 குற்றப்பதிவுகளைக் கொண்ட ஓர் ஆடவன் ரவாங், ஜாலான் புக்கிட் பெருந்தோங்கில் நேற்றிரவு புக்கிட் அமான் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இரவு 9.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேய்ன் ஓமார் கான் (Datuk Hussein Omar Khan) தெரிவித்தார்.
சம்பவத்திற்கு முன்பாக போலீஸ் அவனது காரை நிறுத்தச் சொன்ன போது, அவன் போலீசை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.
போலீசும் பதிலுக்குச் சுட்டத்தில் உள்ளூரைச் சேர்ந்த 36 வயது அவ்வாடவன் கொல்லப்பட்டான்.