
மலாக்கா, மார்ச் 18 – மலாக்காவில் , Bukit Beruang மலையேறியபோது காணாமல் போன ஆடவரின் சடலம் இன்று காலை மணி 9.45 அளவில் கண்டுப் பிடிக்கப்பட்டது. 45 வயதுடைய Stevan Tan கடந்த செவ்வாய்க்கிழமையன்று மலையேறியபோது காணாமல்போனதாக அவரது குடும்பத்தினர் Ayer Keroh போலீஸ் நிலையத்தில் இதற்கு முன் புகார் செய்திருந்தனர். அவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்ட பகுதியில் போலீஸ் தடயயியல் அதிகாரிகளும் சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.