Latestமலேசியா

புக்கிட் மெர்தாஜாமில் கொள்ளையின்போது மாற்றுத் திறனாளி கொலை – ஆடவன் கைது

புக்கிட் மெர்தாஜாம், மே 9 – புக்கிட் மெர்தாஜாம், Guar Perahuவில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் மாற்றுத் திறனாளி ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தததை தொடர்ந்து 40 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக மத்திய செபராங் பிறை OCPD துணை கமிஷனர் Helmi Aris தெரிவித்தார். அதிகாலை வேளையில் அந்த கிராமத்திலுள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார். மரணம் அடைந்த அந்த நபர் தனது பெற்றோருடன் தங்கியிருந்துள்ளார். காலை 8.30 மணியளவில் தாம் எழுந்துபார்த்தபோது தமது மனைவி மற்றும் மாற்றுத் திறனாளியான மகனின் கை கட்டப்பட்டிருந்ததை கண்டதாக 80 வயதுடைய ஆடவர் புகார் செய்துள்ளதாக ACP Helmi கூறினார்.

வாயில் துணியால் மூடப்பட்டிருந்த தனது மகன் மரணம் அடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த முதியவர் இச்சம்பவம் குறித்து
Kubang Semang போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனிடையே அந்த வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் இரண்டு சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட ஆடவன் ஏற்கனவே ஐந்து குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவபந்துள்ளதோடு குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Helmi கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!