புக்கிட் மெர்தாஜாம், செப்டம்பர்-17 – பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குடும்ப மாது, Cherok Tok Kun-னில் 6 அடி ஆழமுள்ள வடிகால் குழியில் விழந்து உயிரிழந்தார்.
இன்று நண்பகல் வாக்கில் மலையேறிய போது வடிகாலில் விழுந்து அவர் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
தகவல் கிடைத்து வந்து சேர்ந்த தீயணைப்பு மீட்புத் துறை, குழியிலிருந்து அம்மாதுவின் உடலை மீட்டு போலீசிடம் ஒப்படைத்தது.
இறந்து போனவர் 50 வயது Oh Ai Chin என அடையாளம் கூறப்பட்டது.
சவப்பரிசோதனைக்காக சடலம் புக்கிட் மெர்தாஜாம் மருத்துவனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.