
ரஷ்யா, கிரெம்ளினில் (Kremlin) இன்று அதிகாலை உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக, மோஸ்கோ கூறியுள்ளது.
அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதல், தோல்விகண்ட ஒரு படுகொலை முயற்சி எனவும், பயங்கரவாத செயல் எனவும் சாடிய ரஷ்யா, அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் சூளுரைத்தது.
எனினும், அந்த குற்றச்சாட்டை மறுத்த உக்ரேனிய அதிபர், புடினையும், மோஸ்கோவையும் குறி வைத்து தாங்கள் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை என கூறியுள்ளார்.
பின்னிரவு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று, ரஷ்ய செய்தி டெலிகிராம் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், அந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதோடு, தகுந்த ஆதாரம் எதுவும் முன் வைக்கப்படாததால், அந்த காணொளியின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.