
கோலாலம்பூர், மார்ச் 14 – Tan Sri Michelle Yeoh-வின் Academy விருதின் வெற்றியை கொண்டாடுவதற்கான நாளை புதன்கிழமையை பொது விடுமுறையாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரகடனப்படுத்துவார் என்ற வெளியான தகவல் முழுக்க முழுக்க பொய்யான செய்தியென பிரதமர்துறை விளக்கம் அளித்துள்ளது. நாட்டிற்கு பெருமைப்படும் தருனமாக இருப்பதால் புதன்கிழமை பொது விடுமுறையை பிரதமர் பிரகடனப்படுத்துவார் என முகநூலில் பதிவிடப்பட்ட தகவல் பொய் என்பதால் அந்த செய்தியை பகிர வேண்டாமென பொதுமக்களை பிரதமர்துறை கேட்டுக்கொண்டது.