ஜகார்த்தா, பிப் 3 – புதிதாக வாகனமோட்ட கற்றுக் கொண்டிருக்கும் கணவரால், பெண் ஒருவர் மோதப்பட்டு இறந்த சம்பவம் இந்தோனேசியா, Lampung, Pringsewu மாவட்டத்தில் நிகழ்ந்தது. சம்பவத்தன்று அந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு வெளியே காரை நிறுத்தி வைக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் வீட்டின் முற்றத்தை பெருக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடிரேன அவரது கணவர் செலுத்திய கார், கட்டுப்பாட்டை இழந்து அந்த பெண்ணை மோதி தள்ளியதில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தாக, Pringsewu மாவட்ட போலீஸ் தலைவர் Dany Waldy தெரிவித்தார் .
Related Articles
Check Also
Close