கெமாமான் , பிப் 8 – புதிதாக பிறந்த குழந்தையைக் கூர்மையான ஆயுதத்தில் குத்தி கொலை செய்ததாக நம்பப்படும், அக்குழந்தையின் தாயான 15 வயது இளம்பெண்ணைப் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்த அந்த இளம்பெண், வீட்டில் யாருமில்லாத நேரத்தில் குழந்தையைப் பிரசவித்ததாக, கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் ( Hanyan Ramlan ) தெரிவித்தார்.
பின்னர் தனக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவலை அருகிலுள்ள சுகாதார கிளினிக்கிடம் தெரிவிக்கும்படி தனது நண்பரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அந்த தகவல் கிடைத்து, அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்ற சுகாதார அதிகாரிகள் , குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப் படுத்தினர்.
மேலும் அக்குழந்தையைப் பரிசோதித்ததில் , அதன் நெஞ்சுப் பகுதியில் கூர்மையான ஆயுதம் குத்தப்பட்ட தடயங்கள் இருந்ததாக, கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் ( Hanyan Ramlan ) தெரிவித்தார்.