கோலாலம்பூர், பிப் 13 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 21,072 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகின. நேற்று பதிவான 22, 802 தொற்று எண்ணிக்கையைக் காட்டிலும் இன்றைய எண்ணிக்கை சற்று குறைந்திருக்கிறது.
புதிய எண்ணிக்கையுடன், நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்று எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியிருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
இவ்வேளையில், புதிதாக கோவிட் தொற்று கண்டவர்களில் 99.59 விழுக்காட்டினர் லேசான அறிகுறிகள் கொண்ட முதல், இரண்டாவது பிரிவுகளைச் சேரந்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.