கோலாலம்பூர், பிப் 18 – நாட்டில் நேற்று 26, 701 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகிய வேளை, மருத்துவமனையில் 1,469 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே நேற்று வரையில், கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நாட்டிலிலுள்ள மருத்துவமனைகளில் 7,119 படுக்கைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மருத்துவமனை கட்டில்களில் பயன்பாடு தற்போது 62 விழுக்காடாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.