Latestமலேசியா

புதியக் கடப்பிதழை எடுக்கச் சென்ற போது 5 ரிங்கிட் கட்டணம் கேட்ட குடிநுழைவு அதிகாரி; மாணவி புகார்

ஜோகூர் பாரு, டிசம்பர்-1,கடப்பிதழ் புதுப்பிப்புக்கான கட்டணத்தை இணையம் வாயிலாகவே செலுத்தி விட்ட போதிலும், தனிப்பட்ட ஒரு வங்கிக் கணக்குக்கு 5 ரிங்கிட்டை மாற்றுமாறு குடிநுழைவுத் துறை அதிகாரி கேட்டதாக, ஜோகூர் பாருவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுப்பிக்கப்பட்ட கடப்பிதழை எடுப்பதற்காக Kotaraya, Gallery-யில் உள்ள UTC ஓரிட சேவை மையத்திற்கு அப்பெண் சென்ற போது அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குடிநுழைவு அலுவலகத்தில் கடப்பிதழைப் பெற்றுக் கொண்ட போது, அங்கிருந்த பெண் அதிகாரி 5 ரிங்கிட் கூடுதல் கட்டணத்தைக் கேட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவியின் கையில் அப்போது ரொக்கம் எதுவும் இல்லை; இதனால் QR குறியீடு வழியாக பணத்தை மாற்றுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஆனால், அந்த QR குறியீடு அரசாங்க வங்கிக் கணக்கல்ல, மாறாக சம்பந்தப்பட்ட அதிகாரியின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு என்பதை மாணவி கண்டறிந்தார்.

கடப்பிதழுடன் பிளாஸ்டிக் உறையும் சேர்ந்து வருமென எனக்குத் தெரியாது; நான் அதற்கு விண்ணபிக்கவுமில்லை. அந்த 5 ரிங்கிட் கட்டணம் எதற்காக வசூலிக்கப்பட்டது என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை என, பெயர் குறிப்பிட விரும்பாத அம்மாணவி NST-யிடம் கூறியுள்ளார்.

5 ரிங்கிட் சிறியத். தொகையென்றாலும், அதிகார துஷ்பிரயோகத்தை தான் ஆதரிப்பதில்லை என்பதே முக்கிமென்றார் அவர்.

அக்குற்றச்சாட்டைக் கடுமையாகக் கருதுவதாகக் கூறிய ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி மொஹமட் டாருஸ் (Datuk Rusdi Md Darus), விசாரணை நடைபெற்று வருவதாகச் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!