
கோலாலம்பூர், மார்ச் 31 – புதிய அந்நிய தொழிலாளர்களுக்கான எண்ணிக்கையை அனுமதிப்பதற்கு முன் அது தொடர்பாக விரிவாக ஆராயப்படும் என மனித வள அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார். ஏற்கனவே நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட அந்நிய தொழிலாளர்கள் எண்ணிக்கையையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என அவர் கூறினார். அந்நிய தொழிலாளர்களுக்கான கூடுதல் விண்ணப்பங்களைத் திறக்குமாறு தொழில்துறையினரிடமிருந்து அழைப்பு வந்தாலும், பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு தன்னிச்சையாக இதை செய்ய முடியாது.வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு முதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. இந்த நிலைமையில் புதிதாக அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்துகொண்டபோது சிவக்குமார் இத்தகவலை வெளியிட்டார் .