
கோலாலம்பூர், டிச 2 – டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கும் புதிய அமைச்சரவையில் ஒருவர் மட்டுமே இந்தியர். சீனர்களின் பிரதிநிதித்துவம் ஐந்து மட்டுமே.
மொத்தம் 28 அமைச்சர்கள் கொண்ட புதிய அமைச்சரவையில் ஓர் இந்தியருக்கு மட்டுமே இடம் கிடைத்திருப்பது பெருத்த ஏமாற்றமாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் பலர் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற நிறைய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில், ஒருவருக்கு மட்டும் தானா அமைச்சர் பதவி என அவர்கள் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இவ்வேளையில் துணையமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்படும்போது, அதிலாவது இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் அதிக பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.