Latestமலேசியா

மலேசியா சுற்றுலாத்துறையின் புதிய தலைமை இயக்குநராக மனோகரன் பெரியசாமி நியமனமா?

கோலாலம்பூர், பிப் 25 – மலேசிய சுற்றுலாத்துறையின் தலைமை இயக்குனர் பதவியிலிருந்து டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் காபர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து அப்பதவிக்கு மனோகரன் பெரியசாமி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமக்கு பதில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க பிரிவின் நடப்பு மூத்த இயக்குநராக இருந்துவரும் மனோகரன் பெரியசாமி அப்பொறுப்புக்கு நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அம்மார் தெரிவித்திருக்கிறார். தற்போது ‘Tourism Malaysia’-வின் திட்ட துணை தலைமை இயக்குநராக மனோகரன் இருந்து வருகிறார். அவருக்கான நியமன கடிதமும் ஏற்கனவே தயார்படுத்தப்பட்டு விட்டதாக மலேசிய சுற்றுலாத்துறைக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்துள்ளன.

மனோகரன் பெரியசாமி விரைவில் தம்மை சந்திக்கவிருப்பதாக வெளியான ஆருடங்களையும் சுற்றுலா,கலை மற்றும் கலச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கோடி காட்டியுள்ளார். எனினும் இந்த தகவலை அவர் உறுதிப்படுத்த மறுத்துவிட்டார். அம்மாருக்குப் பதில் தலைமை இயக்குனநரின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என தியோங் தெரிவித்திருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!