GE15Latestமலேசியா

புதிய அமைச்சர்கள் அதிகாரப்பூர்வமாக இன்று தங்களது பணியை தொடங்கினர்

புத்ரா ஜெயா, டிச 5 – துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி உட்பட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான புதிய அமைச்சர்கள் அனைவரும் இன்று அதிகாரப்பூர்வமாக தங்களது பணியை தொடங்கினர். துணைப்பிரதமரும் கிராம வட்டார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் Ahmad Zahid Hamidi Perdana Putra வில் தமது அதிகாரப்பூர்வ பணியை தொடங்கினார். இன்று காலை 8 மணியளவில் Perdana Putra வந்தடைந்த அகமட் ஸாஹிட்டை அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ Mohd Zuki Ali (முகமட் சுகி அலி வரவேற்றார்.)

அதனைத் தொடர்ந்து தமது அலுவலகத்தின் 4ஆவது மாடிக்கு சென்ற அவர் வருகைக்கான நேர கார்டை பதிவு செய்தார். அதன் பின் வரவேற்பு புத்தகத்தில் கையெழுத்திட்ட பாகன் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான ஸாஹிட் ஹமிடி தமது அலுவலகத்திற்குள் நுழைந்தார். 69 வயதுடைய அகமட் ஸாஹிட் துணைப்பிரதமர் பதவியுடன் கிரமா மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். Perdana Putra கட்டிடம் பிரதமர் அலுவலகம், துணைப் பிரதமர் அலுவலகம் மற்றும் அரசாங்க தலைமைச் செயலாளர் அலுவலகம் போன்ற நாட்டின் முக்கிய நிர்வாக மையமாக செயல்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!