Latestமலேசியா

புதிய ஆதாரங்களை சேர்க்கும் நஜீப்பின் விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

புத்ரா ஜெயா, ஆக 16 -SRC international Sdn Bhd வழக்கு தொடர்பான மேல் முறையீடு வழக்கில் புதிய ஆதாங்களை சேர்ப்பதற்கு முன்னாள் பிரதமர் டத்தோ நஜீப் ரசாக் செய்துகொண்ட விண்ணப்பத்தை கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. உத்தேச கூடுதல் ஆதாரம் என்ன என்பதை நஜீப் தமது விண்ணப்பத்தில் தெரிவிக்கவில்லை என்பதோடு அந்த உத்தேச கூடுதல் ஆதாரம் எதனை நிருபிக்கும் என்பதையும் அவர் தெரிவிக்கவில்லையென ஐவர் கொண்ட அமர்வு நீதிபதிகள் குழுவுக்கு தலைமையேற்றுள்ள தலைமை நீதிபதி Tengku Maimun Tuan Mat தெரிவித்தார். எங்களது சிந்தனைக்கு எட்டியவரை அவருக்கு எதிரான வழக்கில் நீதி தவறவில்லை எனபது ஏகமனதான‘ முடிவு என அவர் கூறினார்.

சபா மற்றும் சரவா நீதிபதி டான்ஸ்ரீ Abang Iskandar Abang Hashim, கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் டத்தோ நளினி பத்மநாதன், Datuk Mary Lim Thiam Suan, Datuk Muhamad Zabidin ஆகியோர் நஜீப் மீதான மேல்முறையீட்டின் வழக்கை செவிமடுக்கும் இதர நீதிபதிகளாவர். கூடுதல் ஆதாரங்கள் இல்லாமலேயே பிரதான முறையீட்டில் சட்ட அம்சங்களை எதிர்தரப்பு வாதம் செய்ய முடியும் என்றும் Tengku Maimun தெரிவித்தார். எனவே கூடுதல் ஆதாரங்களை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை நாங்கள் தள்ளுபடி செய்கிறோம் என அவர் தீர்ப்பளித்தார். வழக்கின் பிரதான மேல்முறையீடு குறித்து கவனம் செலுத்தும்படி தலைமை நீதிபதி கூறியவுடன் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என நஜிப்பின் வழக்கறிஞர் குழுவுக்கு தலைமையேற்றுள்ள Hisyam Teh Poh Teik கோரிக்கை விடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!