
ஈப்போ, மார்ச் 11 – புதிய கலப்பின ஆர்கிட் மலருக்கு , Aranda PMX -Anwar என நாட்டு பிரதமரின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
ஈப்போ, தாமான் டாக்டர் ஶ்ரீநிவாசகம் பகுதியில் தேசிய நில வடிமைப்பு தின நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் இந்த அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த புதிய கலப்பின ஆர்கிட் மலர் மகிழ்ச்சி, நம்பிக்கை, உற்சாகம் ஆகிய பண்புகளைப் பிரதிபலிக்கும் மஞ்சள் – ஆரஞ்சு நிறங்களைக் கொண்டிருக்கிறது.
இந்த ஆர்கிட் மலரின் தன்மை பிரதமரின் குணநலன்களை ஒத்திருப்பதால் , அந்த மலருக்கு அன்வாரின் பெயர் சூட்டப்பட்டது.