பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 17 – புதிய கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலையில், மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி விழுந்த இளைஞர் ஒருவர் லோரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார்.
19 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் சென்று கொண்டிருந்த லோரியின் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஏற்பட்ட பலத்த காயங்களினால், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை போக்குவரத்துச் சட்டம் 1987-யின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.