Latestமலேசியா

புதிய கோவிட் தொற்று 6,630-ஆக பதிவு   

கோலாலம்பூர், அக் 22 – நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் 6,630  புதிய கோவிட்  தொற்று சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக, சுகாதார அமைச்சு தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக, கோவிட் தொற்றுக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை,  தேசிய நிலையில் 11 விழுக்காட்டிற்கும் அதிகமாக குறைந்திருக்கிறது.

எனினும், சில மாநிலங்களில் குறிப்பாக  கோலாலம்பூரிலும் சரவாக்கிலும் கோவிட் தொற்றுக்காக  மருத்துவமனைகளில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, சுகாதார அமைச்சு அதன்  CovidNow  அகப்பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, நாட்டில் கோவிட் தொற்று சம்பவங்கள் குறைந்திருப்பதோடு, நேற்று நாட்டில்   R-naught விகிதம்  0.86-ஆக பதிவானது.

R -naught  விகிதம் 1.00 -க்கு கீழ் இருப்பது , தொற்றின் ஆபத்து குறைந்திருப்பதற்கான அறிகுறியாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!