
சென்னை , மே 15 – நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்துள்ள பர்ஹானா திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் அப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. முஸ்லிம் பெண்ணாகவும் ஐஸ்வார்யா ராஜேஸ் நடித்திருக்கும் இப்படம் வெளியிடக்கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்துள்ளன. நெல்சன் வெங்கடேசன் தயாரித்துள்ள அந்த திரைப்படம் இரண்டு நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியீடு கண்டது. இதனைத் தொடர்ந்து சென்னை தியாகராய நகரிலுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.