
ஷா ஆலாம், மார்ச் 23 – புதிய பள்ளித் தவணையின் தொடக்கம் மீண்டும் ஜனவரி மாதத்திற்கு திரும்பும் என கல்வியமைச்சு உறுதியளித்திருக்கிறது . எனினும் அதற்கு சில கால அவகாசம் தேவைப்படுவதாக, அமைச்சர் பட்லினா சீடேக் ( Fadhlina Sidek ) தெரிவித்தார்.
கோவிட் பெருந்தொற்றை அடுத்து, 2022 -ஆம் ஆண்டு தொடங்கி , புதிய பள்ளித் தவணையின் தொடக்கம், ஜனவரியிலிருந்து மார்ச்சிற்கு மாற்றப்பட்டது.
எனினும், மீண்டும் ஜனவரிக்கே புதிய பள்ளித் தவணை திரும்ப வேண்டுமென , பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதையடுத்து, 190 பள்ளி நாட்கள், முக்கிய தேர்வுகள் போன்றவை தடைபடாமல் இருக்க, அந்த மாற்றத்தை செய்ய அமைச்சுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக பட்லினா சீடேக் கூறினார்.