
ஜோகூர் பாரு, செப் 4 – அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள புதிய மடானி பட்ஜெட்டில், விரிவுரையாளர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் ஊதியம் மற்றும் பணி ஓய்வு குறித்த விரிவான ஆய்வு முடியும்வரை இது தற்காலிக நடவடிக்கையாக இருக்கும் என பிரதமர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரம் குறித்த விரிவான ஆய்வு இவ்வருடத்திற்குள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10லிருந்து 12 ஆண்டுகளாக விரிவுரையாளர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை என்பதை அறிகிறேன். விதிமுறையின்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு செய்யப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இன்று மலேசிய தொழில்நுட்ப கல்லூரியில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 4000 பேர் கலந்துக் கொண்ட ‘Temu Anwar’ எனும் நிகழ்வில் கலந்துக் கொண்ட பிரதமர் இத்தகவலை தெரிவித்தார்.