
தமது தலைமைத்துவத்தின் கீழ், நாட்டில் புதிதாக வானளாவிய கட்டடம் எதுவும் கட்டப்படாது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
தலைநகரில், இரட்டை கோபுரம், TRX, Telekom கோபுரம் என போதுமான வானுயர் கட்டடங்கள் உள்ளன.
அதனால், அதுபோன்ற கட்டடங்களை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டை, சிறு நடுத்தர தொழில்துறையினருக்கு உதவ பயன்படுத்தலாம் என பிரதமர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் உணவு அங்காடி கடைகளின் சுகாதாரம் மற்றும் சுற்றுசூழலில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்றார்.
அதனை கருத்தில் கொண்டே, சம்பந்தப்பட்ட கடைகளின் நிலவரத்தை நேரடியாக கண்டறிய, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அங்கு வருகை புரிவதை தாம் வழக்கமாக்கி கொண்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.