
கராச்சி , மார்ச் 13 – டில்லியிலிருந்து கட்டாருக்கு புறப்பட்ட IndiGo விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவரின் உடல் நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்க விமானம் கராச்சியில் அவரசரமாக தரையிறங்கியது. விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட பயணிக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவினரும் தயராய் இருந்தனர். விமானம் தரையிறங்கியதும் மருத்துவ குழுவினர் அந்த பயணியை பரிசோதனை செய்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த பயணி ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.