Latestஇந்தியாஉலகம்

புது டெல்லியில் இவ்வாரம் அதீத வெப்பம் நீடிக்கும் ; இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை

புதுடெல்லி, ஜூன் 17 – இந்தியா, புதுடெல்லியில் இவ்வாரம் அதீத வெப்பம் நீடிக்கும் என, உள்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, நேற்று வரை தொடர்ந்து மூன்று நாட்களாக வெப்பமான இரவு நீடித்ததாக கூறப்படுகிறது.

அதனால், பல இடங்களில் தட்ப வெப்ப சூழல் 40 பாகை செல்சியசாக பதிவானது. அது வழக்கத்தை காட்டிலும் 4.5 பாகை செல்சியல் அதிகமாகும்.

வரும் நாட்களில், அதனை விட மோசமாக, தட்ப வெப்ப சூழல் 44 அல்லது 45 பாகை செல்சியல் வரை அதிகரித்து பதிவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனால், வெப்பம் தொடர்பான உடல் உபாதைகள் அல்லது சுகாதார பிரச்சனைகள் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி ஆகிய இடங்களிலும், உத்தரப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் கடுமையான வெப்ப அலை ஏற்படும் என கூறப்படுகிறது.

எனினும், வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளதால், தட்ப வெப்ப சூழல் 42 பாகை செல்சியசாக குறைந்து நிலைமை கொஞ்சம் சீரடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, அடுத்த நான்கு அல்லது ஐந்து நாட்களில், மேற்கு வங்கம், ஒடிசா உட்பட வடகிழக்கு மாநிலங்களில், கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!