
புது டெல்லி, ஆக 19 – நேற்று வெள்ளிக்கிழமை இந்திய தலைநகர் புது டெல்லியிலிருந்து புனே செல்லவிருந்த விமானத்தில் வெடிகுண்டி இருப்பதாக வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து, விமானத்திலிருந்து பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பயணிகள் விமானத்தில் ஏறிக் கொண்டிருந்த சமயத்தில் வந்த அழைப்பைத் தொடர்ந்து இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் பதற்ற நிலை உருவானது.
பரிசோதனைக்குப் பின்னர், வெடிகுண்டி எதுவும் இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது.