கோலாலம்பூர், ஜனவரி-4, “Becoming Hannah: A Personal Journey” என்ற புத்தகத்திற்கு எதிராக 157 போலீஸ் புகார்கள் பெறப்பட்டிருப்பதால், இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோவிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவுள்ளது.
அவ்விவகாரத்தில் இதுவரை 45 பேரது வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் அஸ்ரி அக்மார் ஆயோப் (Azry Akmar Ayob) தெரிவித்தார்.
போலீஸ் புகாரைச் செய்துள்ள சில அரசு சார்பற்ற அமைப்புகள், தேசியப் பாதுகாப்புக் கருதி ஹானா இயோவின் அப்புத்தகத்தை தடைச் செய்யுமாறு உள்துறை அமைச்சை வலியுறுத்தியுள்ளன.
மலேசியாவை கிறிஸ்தவ நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியே அந்த புத்தக வெளியீடு எனக் கூறி பல்வேறு அவதூறு வீடியோக்கள் பரவி வருவதாக, ஹானா இயோவும் போலீஸ் புகார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவை ‘கிறிஸ்துவ நாடாக’ தாம் மாற்ற முயலுவதாக தேசியப் போலீஸ் படை முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ மூசா ஹசான் அவதூறு பரப்பியதாக ஹானா தொடுத்த வழக்கை, முன்னதாக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அம்முடிவை எதிர்த்து செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹானா மேல் முறையீடு செய்யவுள்ளார்.