Latestஉலகம்

புத்தாண்டு தினத்திலும் வட கொரியா ஏவுகனை பாய்ச்சியது

சோல், ஜன 1 – இன்றைய புத்தாண்டு தினத்திலும் ஆயுத பரிசோதனையை வட கொரியா மேற்கொண்டது. நேற்று மூன்று ஏவுகணையை பாய்ச்சிய 24 மணி நேரத்திற்குள் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏறபடுத்தும் வகையில் இன்று அதிகாலை மணி 2.50 அளவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வட கொரியா பாய்ச்சியது. கொரிய தீபகற்பம் மற்றும் அனைத்துலக சமூகத்தின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் மிரட்டலை ஏற்படுத்தும் அந்த நடவடிக்கையை தென் கொரியா கடுமையாக சாடியது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஆண்டு மட்டும் 70க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தியுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!