கோலாலம்பூர், டிசம்பர் 28 – மலரவிருகின்ற 2025ஆம் புத்தாண்டு தினத்தில் பத்துமலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பிரம்மாண்டமான முருகன் திருவுருவச் சிலைக்குப் பன்னீர் அபிஷேக விழா நடைபெறவுள்ளது.
இவ்விழா 9ஆம் ஆண்டாக சிறப்பாக நடைபெறவுள்ளதாக கூறுகிறார் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா.
ஜனவரி 1 ஆம் திகதி புத்தாண்டை முன்னிட்டு இந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களும் இணைந்து 140அடி உயர முருகனுக்குப் பன்னீர் அபிஷேகம் செய்ய அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சிறப்பு பூஜைகளுக்குப் பின் காலை 9.30 மணிக்கு முருகன் சிலைக்கு பன்னீர் அபிஷேகம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து நண்பகல் அன்னதானமும் வழங்கப்படும்.
அருளே வடிவான முருகனது திருவடிகளைப் பூஜித்திட, பக்தர்கள் தங்களின் பொறுமையைக் கடைப்பிடித்து வரிசையில் நின்று, திரளாக இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு டான் ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.