Latestமலேசியா

புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள்

கோலாலம்பூர், ஜன 1 – இன்று 2023 புத்தாண்டு மலர்ந்ததை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறைப்பு பூஜைகள் நடைபெற்றன. பெரும்பாலோர் தங்களது குடும்பத்தோடு ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டதோடு தங்களது உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டணர். பத்துமலை திருத்தலத்திலுள்ள ஸ்ரீ கணேசர் ஆலயம், கோலாலம்பூர் ஜாலான் புடுவிலுள்ள கோர்ட்டு மலை பிள்ளையார் ஆலயம், ஈப்போ கல்லுமலை சுப்ரமணியர் ஆலயம், லாகாட் சாலையில் அமைந்துள்ள மரத்தடி விநாயகர் ஆலயம் உட்பட பல ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்றன.

இன்றைய புத்தாண்டு தினத்தில் வழக்கத்திற்கு மாறாக ஆலயங்களில் பெரும் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். கடந்த இண்டுகள் கோவிட் பெரும் தோற்றினால் பலர் ஆலயத்திற்கு செல்ல முடியாத நிலை உருவானது. இன்று ஆலயங்களுக்கு செல்ல தடை நீக்கியதால் காலை 7 மணி முதல் பலர் குடும்பத்தோடு பூஜைகளில் பங்கேற்றனர். அதே வேளையில் கோவிட் -19 தொற்று பரவலை தடுக்கும் வகையில் பலர் முன்னெச்சரிக்கையாக முகக் கவசங்களையும் அணிந்திருந்தனர். பெரும்பாலான ஆலயங்களில் பூஜைக்குப் பின்னர் காலை சிற்றுண்டியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!