
கோலாலம்பூர், மார்ச் 13 – புத்ரஜெயா MRT சேவைக்கான ரொக்கமில்லா கட்டண முறையில், Credit – Debit வங்கி அட்டைகளையும், விவேக கைகடிகாரங்களின் பயன்பாட்டினையும் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த புதிய MRT வழிதடத்துக்கான சேவை, புதிய கட்டண முறையை சேர்த்துக் கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்டிருப்பதாக, Mass Rapid Transit நிறுவன தலைமை செயல் முறை அதிகாரி Zarif Hashim தெரிவித்தார்.
Kentonmen – னிலிருந்து Putrajaya Sentral வரையிலான இரண்டாம் கட்ட MRT சேவை இவ்வாரம் வியாழக்கிழமை தொடங்கவிருக்கும் நிலையில், ஊடக பணியாளர்கள் அந்த வழிதடத்தில் பயணம் செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர்.
அப்போது, புத்ராஜெயா MRT சேவையில் காணப்படும் புது அம்சங்களை Zarif Hashim ஊடகங்களுக்கு விளக்கினார்.