
கோலாலம்பூர், மார் 4 – புத்ராஜெயாவுக்கான MRT சேவை, மார்ச் 16 -ஆம் தேதி தொடங்குமென போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
57. 7 கிலோமீட்டர் தூரம் கொண்ட புத்ராஜெயா வழித்தடம் , 20 லட்சம் பேருக்கு போக்குவரத்து சேவையை வழங்கக் கூடியது. அந்த வழித்தடம் 9 சுரங்க நிலையங்கள் உட்பட மொத்தம் 36 நிலையங்களை உட்படுத்தியுள்ளது.
தொடக்க கட்டமாக புத்ராஜெயா MRT, நாளொன்றுக்கு 1 லட்சத்து 4,000 பயணிகளை ஏற்றிச் செல்லுமென எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.