Latestமலேசியா

புத்ரா ஜெயாவில் மனக்கசப்பால் வீட்டை விட்டு வெளியேறிப் பெண்; பதற்றத்தில் குடும்பம்

புத்ரா ஜெயா, மார்ச் 17 – குடும்ப மனக்கசப்புக் காரணமாக 20 வயதுப் பெண்ணை சில நாட்களாகக் காணவில்லை என புத்ரா ஜெயா போலீசுக்கு புகார் கிடைத்திருக்கிறது.

பிள்ளை வீட்டில் இல்லாததைக் கண்டு அப்பெண்ணின் மாற்றான் தந்தை Precint 11 போலீஸ் நிலையத்தில் புதன் கிழமையன்று அப்புகாரைச் செய்துள்ளார்.

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, நூருல் அய்ஷா அப்துல்லாவின் தலையில் அடி பட்டு விட்டது; இதனால் கடும் கோபத்தில் அன்றைய நாளில் வெளியே போனவர், இதுவரை வீடு திரும்பவில்லை என மாற்றான் தந்தை போலீசிடம் கூறியுள்ளார்.

நூருல் அய்ஷாவை திங்கட் கிழமையில் இருந்து வீட்டில் காணவில்லை என்ற செய்தி முன்னதாக சமூக ஊடகங்களிலும் பரவியது.

அவள் வேலை செய்யவில்லை; பெற்றோருக்கு உதவியாக தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்வாள்; வீட்டை விட்டு எங்கும் தொலைவில் இதுவரை சென்றதில்லை; அவள் சீக்கிரமே பாதுகாப்பாக வீடு திரும்புவாள் என வேண்டிக் கொள்கிறோம் என அய்ஷாவின் தாய் சோகத்துடன் கூறினார்.

காணாமல் போனதாக அச்சம்பவம் வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுவதுடன், தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, புத்ரா ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் A Asmadi Abdul Aziz சொன்னார்.

நூருல் அய்ஷா குறித்து தகவல் தெரிந்தோர், அவரின் குடும்பத்தையோ அல்லது போலீசையோ தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!