Latestமலேசியா

புத்ரா ஜெயா எம்.பி ரட்ஸி ஜிடினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

கோலாலம்பூர், மார்ச் 10 – புத்ரா ஜெயாவின் பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் Radzi Jidinனு-க்கு எதிரான தேர்தல் வழக்கு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவருக்கு எதிராக வாக்காளர் ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கு மனுவில் போதுமான ஆதாரம் இல்லையென்பதால் Radzi Jidin னின் தேர்தல் வெற்றி செல்லும் என நீதிபதி Faiza Jamaludin தீர்ப்பளித்தார். Radzi-யின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக Putra Jaya நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக Ahmad Faisal Abdul Karim தொடுத்துள்ள வழக்கு மனுவில் போதுமான ஆதரங்கள் இல்லையென நீதிபதி Faiza சுட்டிக்காட்டினார். 15ஆவது பொதுத் தேர்தலில் 2, 310 வாக்குகள் பெரும்பான்மையில் புத்ரா ஜெயா நாடாளுமன்ற தொகுதியில் Radzi வெற்றி பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!